தலை கண்கள் என்னும் உறுப்புகள் நமக்கு எண்ணிலாப் பணிகளைச் செய்திடும் நாளும்! கண்கள் மீன்போல் கவர்ச்சியாய்த் தோன்றிட பெண்கள் தீட்டும் மையினில் கவனம்! வண்ண வண்ணக் கண்ணாடிகளைக் கண்ணில் அணிந்தால் எரிச்சல் கொடுக்கும் பார்வைக் கோளாறு இருப்பதை மருத்துவர் கூர்மையாய் அறிந்து தரும் கண்ணாடியை அணிதல் நல்லது அதனால் குறைகள் தணிந்திடும் பார்வை சீராய் அமையும்! கண்புரை என்றால் கவலை வேண்டாம் நுண்ணிய கருவிகள் பார்வைக்கு உதவிடும்! மின்னல் வெட்டையும் தகிக்கும் கதிரையும் துன்னிடும் சூரிய கிரகணம் இவற்றை வெறும் கண்களினால் பார்ப்பது கெடுதி மறவாமல் கருங்கண்ணாடி அணிக! சென்னைக் கண்நோய் சிவந்திடும் விழிகள் ஒன்றொன்றாகத் தொற்றிக் கொள்ளும்! திரைப்படம் தொலைக்காட்சிகளை மிகவும் அருகில் பார்த்தால் தலைவலி! கண்வலி! வீட்டில் இருந்தே மருத்துவம் பார்த்தால் வாட்டம் குறையும் கண்சீராகும்! கண்களை தானம் செய்திட விரும்பல் புண்ணியச் செயலாம் போற்றப்படுவீர்! மூக்கு மூக்கும் முழியும் இருந்தால் பெண்ணைத் தூக்கிச் செல்லப் போட்டியில் நிற்பார்! எடுப்பாய் நாசி இருந்திடில் பெண்ணைக் கொடுக்க, கொள்ள, ஆசைப்படுவர்! சின்னப் பிள்ளையாய் இருக்கும்போதே உன்னிப்பாக உடலைப் பேணினால் சளித் தொல்லைகள் இருமல் தும்மல் விளைந்து விடாமல் காத்திட முடியும்! பொது இடங்களிலே சிந்தல், துப்பல் அதுவே குற்றம்! கிருமிகள் பெருகிடும்! தும்மல் வந்தால் மூக்கைப் பொத்துக விம்மி வெடித்தால் அடுத்தவர் வெறுப்பர்! பீரங்கிக்குள் கரிமருந்ததனை தாராளமாகச் செலுத்தல் போன்று மூக்குப் பொடியை மூக்குத் துளைகளுள் தாக்குதல் போன்றே திணித்திடுவார்கள் ஊக்கம் வந்திடும் உற்சாகம் வரும் தூக்கம் வராதெனச் செப்பிவிடுவார்கள்! வாய்க்குள் விரலால் பற்களின் மீது தேய்த்திடுவார்கள் மூக்குப் பொடியை எப்படிப் பொடியைப் பயன்படுத்திடினும் தப்பாமல் உடல் சீர்கேடடையும்! விடியற் காலையில் மூக்கின் வழியாய் நெடிய மூச்சும் சிறிய மூச்சும் இழுத்தும் விட்டும் பயிற்சிகள் செய்தால் பழுத்த வயதிலும் மூச்சு இறைக்காது! காது காதுகள் இன்றேல் கேட்கும் திறனிலை காதணி விழாவால் செவிக்கும் பெருமை! கண்டதை எல்லாம் காதில்விட்டுக் கண்டபடியாய்க் குடைந்திட வேண்டா காதில் தண்ணீர் புகுந்திடா வண்ணம் தோதாய்க் குளித்துத் துண்டின் துணியைத் திரியாய்ச் சுருட்டிக் காதினுள் விட்டால் உறிஞ்சிடும் நீரை செவிக்கும் நல்லது! ஒலிப்பெருக்கியின் ஒலியைக் குறைப்பீர் செல்லிட பேசியில் தொடர்ந்து பேசற்க!
எறும்பும் தன் கரத்தால் எட்டுச்சாண்
திறம்மிகு மனிதனும் எண்சாண் உயரம்
எண்சாண் உடம்பில் தலையே முதன்மை
எண்ணம் இயக்கம் யாவும் தலையே!
காளை வேகம் கணினியை மிஞ்சிடும்
மூளையின் செயல்திறம் மும்மடங்காகும்
இடப்புற உடலை வலப்புற மூளையும்
இடப்புற மூளை வலப்புற உறுப்பையும்
சீராய் நன்றே இயங்கிடச் செய்திடும்
கூராய் மதியினைப் புதுக்கிடச் செய்திடும்!
சாலையில் ஊர்தியை ஓட்டும் போதும்
ஆலையில் செய்யும் வேலைகளாலும்
தலைக்குக் காயம் நேரா வண்ணம்
தலைக் கவசத்தைப் பயன்படுத்துவீரே!
கூந்தல்
தலைமுடி அழகாய் இருந்திடவேண்டி
தலையைக் கெடுக்கும் திரவம் பூசி
உள்ள முடிகளை இழந்திட வேண்டா!
தெள்ளிய சிகைக்காய் தேங்காய் எண்ணெய்
நெல்லி, கறிவேப்பிலை, செம்பருத்தி,
நல்ல விதமாய்த் தலைமுடிக்குதவும்
சொண்டுகளுடனே சண்டை போட்டிடும்
இளநரை போக்கிடும் வழுவழுப்பாக்கும்
இளைஞர்கள் இதனைக் கருத்தில் கொள்வீர்!
அழகு நிலையத் தலைமுடிக் கழுவல்
அழகாய்த் தோன்றிடும் சிலநாள் வரையில்
தொடர்ந்து செய்தால் துட்டும் விரயம்
இடர்ப்பாடாகும் ஏற்றிடா உடலால்!
துளசி இலைகளைத் தலையணையாக்கினால்
வெளியேறிடுமே ஈரும் பேனும்!
வெதுவெதுப்பான நீரில் குளித்தால்
அதுவே சுகமென உரைப்பார் வள்ளலார்
குளிக்கும் போதே உடலைத் தேய்த்து
எளிதாய் அழுக்கைப் போக்கிட வேண்டும்!
புளித்த தயிரும் பயத்தம் பொடியும்
எளிதாய்ச் சிகையைக் கழுவிடச் சிறந்தவை!
குளித்தபின் தலையை உலர்த்த துணியால்
அழுத்தமாய்த் தேய்த்தே உலர விடுக!
மின் உலர்த்தியினால் ஈர முடிகள்
தன்னிலை இழந்தே வேர்க்கால் தளரும்
மெல்ல மெல்ல முடிகள் உதிர்ந்திடும்
நல்ல கூந்தல் நார் போலாகும்!
நரை திரை என்பது மூப்பின் அறிகுறி
நரைத்த தலைக்கு நன்மதிப்பு உண்டு
கருப்பு மையைத் தலையில் பூசி
இருப்பதை இழந்து வருத்தப் படற்க!
ஒவ்வாமை நோய் தோலில் கண்ணில்
எவ்விடந்தனிலும் எரிச்சலை அளிக்கும்!
நெற்றி
சிறிய நெற்றி பெண்டிர்க்கு அழகு
அறிவார் நெற்றியில் அகலம் காணலாம்!
நெற்றியில் பொட்டு மகளிர்க்கு எழிலாம்
நெற்றியோ கறுத்திடும் இரசாயனப் போட்டால்!
உடைகளுக்கு ஏற்ற நிறத்தில் வடிவில்
கடைகளில் விற்கும் பொட்டும் கெடுதி
முகத்தைக் கழுவிடும் போதில் பொட்டு
நகர்ந்தே கண்ணுள் மாட்டிக்கொள்ளும்!
கண்
ஒளி இல்லையெனில் உலகு இருட்கோளம்
ஒளி வழியாக உலகைப் பார்த்திடக்
வாய்
வாயைச் சுத்தமாய் வைத்திடாவிட்டால்
நோயை அளிக்கும் கிருமிகள் பலவும்
உள்ளே தங்கிடும்; உறங்கி எழுந்ததும்
சுள்ளெனத் தேநீர் பருகிட வேண்டா
வாய் கொப்பளித்துப் பற்களைத் துலக்கி
நோய் வரா வண்ணம் எதையும் பருகுக!
புதினாக் கீரை வாய் நாற்றத்தை
இதமாய்ப் போக்கி மணத்திடச் செய்திடும்!
பற்கள்
செங்கல் தூளும் சாம்பலும் மணலும்
உங்கள் பற்களை உடைத்துப் போட்டிடும்
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
போலி விளம்பரம் பற்பொடி கெடுதி!
மிகச் சூடாக உண்டிட வேண்டா
மிகக் குளிர்வாகவும் பருகிட வேண்டா
முத்துப் போன்ற பற்களே உங்கள்
சொத்தெனக் கொள்வீர். ஈறுகள் வீங்கி
சொத்தைப் பற்கள் வருவதைத் தடுப்பீர்!
நித்தமும் இருமுறை பல்துலக்கிடுவீர்
பல்போனாலே சொல்போச்சு என்ற
சொல்லை மனதில் இருத்திடவேண்டும்!
உதடுகள்
சிவந்த இதழ்கள் சிந்திடும் புன்னகை
உவப்பை அளிக்கும் உள்ளம் கழிக்கும்
உதட்டுச் சாயம் அழகைக் கூட்டும்
அதுவே பெண்களின் பகையாய் மாறும்!
சீராய் நாளும் சாயம் பூசிடில்
நேராய் வந்திடும் மார்பகப் புற்றுநோய்!
வெண்குழல், சுருட்டு, பீடிகள் புகைத்தும்
புண்படுத்தாதீர் உதடுகள் தம்மை
கருப்பாய் உதடும் ஈரலும் மாறிடும்
இருமலும் சளியும் எளிதில் சேர்ந்திடும்
எலும்புருக்கி எனும் நோயது வந்தால்
பலவீனமாக உடல் இளைத்து உழலும்
புகையே பகையாம்; உடனிருப்போரும்
புகையால் துன்பம் அடைந்திடுவார்கள்!
நாக்கு
நாவைச் சுத்தமாய் வைத்திட வேண்டும்
பூவைப் போன்று வழித்திட வேண்டும்
நாக்கில் வசம்பைத் தேய்த்தால் குழந்தை
சீக்கிரமாகப் பேசிடும் என்பர்!
பொத்துப் போகும் சூடாய் உண்டால்
செத்துப் போகும் நாவின் சுவைத்திறன்!
சுவையே பெரிதெனச் சப்புக் கொட்டி
கவளம் கவளமாய் உள்ளே தள்ளினால்
பருத்திடும் தொந்தி சிறுத்திடும் உயரம்
விருப்புடன் நோய் வயிற்றுள்ளே விளைந்திடும்!
வேகா உணவை விழுங்கிட வேண்டா
நாகாக் கவென வள்ளுவர் உரைத்தார்
நல்லவை தீயவை என்றே பிரித்து
நல்ல உணவை நலமாய் உண்க!
Saturday, January 9, 2010
எண்சாண் உடம்பைக் கண்போல காப்போம் 1
எண்சாண் உடம்பைக் கண்போல காப்போம் - II
அரிசி, கோதுமை, கேழ்வரகு உணவு நோய்க் கிருமிகள் இல்லாக் குடிநீர் கள்ளச் சாராயத்தை குடித்தோர் கொள்ளியால் தலையைத் தேய்த்தது போன்று பார்வை இழந்து நாத்தடுமாறி கோரமாக மரணம் தழுவினார்! போதை மருந்தும் போதை ஊசியும் பாதை மாற்றிடும் பயங்கரப் பேய்களாம்! எலும்புகள் நோய் எதுவாயினும் கலங்கிட வேண்டா நீயே மருந்தைக் கலக்கிட வேண்டா மருத்துவர் சொல்லா மருந்துகள் உண்பது வருத்தமாய்ப் பக்க விளைவுகள் அளித்திடும்! எலும்பு முறிவுஎனில் ஏற்ற சிகிச்சை நலமாய்ச் செய்தே நலம்பெற வேண்டும்; நாட்டு மருந்துகள் பச்சிலைக் கட்டுகள் மூட்டைப் பொருத்த முற்றிலும் உதவா! உடல் சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் தவறிலாப் பழக்க வழக்கம் வேண்டும் நல்ல உள்ளம் நல்ல உடலில் வல்லமையுடனே இருந்திடும் என்பர்; 'உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேன்' என திறம்பட உரைக்கும் திருமந்திரமும்! உடல்வலுவு அடையப் பயிற்சிகள் வேண்டும் திடகாத்திரமாய்த் தெரிந்திட தினமும் உடற்பயிற்சியினை விடாது செய்வீர்! நடைப் பழக்கமும் ஓர் நல்ல பயிற்சி! தற்காப்புக் கலை தெரிந்திடல் நலமே மற்போர் சிலம்பம் போற்றிட வேண்டும்! நீந்தத் தெரிதல் பிறர்க்கும் உதவும் நீந்தினால் உடலும் வலுவாய் மாறிடும்! உதவியில் சிறந்தது முதல் உதவியாகும் முதல் உதவியினால் உயிரைக் காக்கலாம் மனத்தை அடக்கி ஒருநிலைப்படுத்தி தினமும் தியானம் செய்து வந்தால் உள்ளமும் உடலும் உற்சாகம் பெறும்! பருத்திநூல் ஆடைகள் விருப்புடன் உடுத்துக கோடை குளிர்ச்சி இரு பருவத்திலும் சோடை போகாது சுகமாய் உழைக்கும்! நொறுக்குத் தீனியும் நொடிக் கொரு 'காப்பி'யும் பெருத்திடச் செய்யும் எவரது உடலையும்! பருத்த தொந்தி பார்ப்பதற்கு அழகா? சிறுத்த கொடியிடைப் பெண்விரும்பிடுமா? இதய நோய்கள் மூட்டு வலிகள் பொதபொத உடம்பில் புகுந்து ஆட்டமிடும் சர்க்கரையுடனே உடல் எடை குறைப்பீர்! சித்திரம் வரைதல் கைக்கும் பழக்கம் சுத்தமாய் செந்தமிழ் நாவின் பழக்கம் உரக்கப் படித்தால் உச்சரிப்பு உயரும் உரக்கவே மேடையில் பேசவும் முடியும்! சிரிப்பும் சிறந்த மருந்தே ஆகும் சிரிக்கும்படி நாம் வாழ்ந்திடல் தவறு! உழைத்தப்பின் உண்பது உடலுடன் ஒட்டும்! உழைப்புக்கு ஏற்ற உறக்கம் வேண்டும் பகலில் உறங்கினால் பருத்திடும் உடம்பு சுகமாய் உறங்கிட இரவே சரியாம்! வடக்கே தலையை வைத்துப் படுத்தால் இடக்குப் பண்ணிடும் காந்தப் புலன்கள். உடையும் படுக்கையும் மனமும் தூய்மை நொடிப்பொழுதினிலே தாலாட்டிசைக்கும் இரவில் பத்து மணிக்குப்படுத்து, வைகறையில் ஐந்து மணிவரை உறங்குக சூரியன் உதிக்குமுன் எழுந்து குளிப்பது சீரிய பழக்கம் சிந்தனை வளம்பெறும் காலையில் படித்தால் மனதில் பதியும் காலையில் பாடினால் குரல் வளம் பெறுமாம்!
வயிறு
சரியாய் உண்டால் உடல்நலம் கூடும்;
இட்டிலி, தோசை உளுந்தின் திறனால்
கெட்டியாய் எலும்பை வைத்திட உதவும்!
உண்ணும் போதினில் இடையிடையே நீர்
உண்ணும் பழக்கம் தவிர்த்திட வேண்டும்!
காய்கறி பழங்கள் கணிசமாய் உண்டால்
நோய் அணுகாது உடல்சீர் அடையும்!
பச்சைக் கீரை நெல்லிக்காயை
இச்சையாய் உண்டால் இளமை துள்ளிடும்!
வல்லாரைக்கீரை வெண்டைக்காய்
துல்லியமாய் நினைவாற்றல் வளர்த்திடும்
வேப்பம்பூவும் பாகற்காயும்
சாப்பிட வயிற்றில் கிருமிகள் தங்கா!
வாழைப் பழத்தால் சீரணம் எளிதாம்
ஏழைகள் இதனை என்றும் உண்பர்;
சிறுநீர்க் கற்கள் சேரா வண்ணம்
சிறிய வாழைத் தண்டுகள் காத்திடும்!
பித்தம் போக்கிடும் இஞ்சியும் சுக்கும்
மெத்தப் பசியை எழுப்பிட உதவும்!
கொத்த மல்லி பனங்கருப்பட்டியை
சுத்தமாகக் காய்ச்சிக் குடித்தால்
ஒத்தைத் தலைவலி பறந்து போய்விடும்!
இயற்கைத் தேனோ மருந்தாம்! உணவாம்!
இயற்கை உணவே என்றும் நல்லது!
சைவ உணவே சாலச் சிறந்தது
அசைவம் தவிர்த்தால் ஆயுள் நீளும்
வள்ளுவர் கூறும் கொல்லாமையினைத்
தள்ளிட வேண்டா; தகவாய் நடப்பீர்!
பசித்தபின் புசிக்கப் பழகிட வேண்டும்
பசித்திடும் வயிறு ருசி அறியாது!
பயறுகள் கிழங்குகள் அளவாய் உண்டால்
வயிறும் நலமாம் வாய்வும் குறையும்!
உறைகொள் புதுத்தயிர் எலும்பையும் காக்கும்
இரவினில் வேண்டாம் கீரையும் தயிரும்!
மிளகு, பூண்டு, பருப்பு ரசம் சுவை
அளவுடன் பருகலாம் அதுவே தனிச்சுவை!
எண்ணையில் பொரித்தவை தின்னச்சுவைதரும்
கண்ணியமாகச் சிறிதே உண்பீர்!
ஆவியில் வெந்த உணவே நல்லது
நோவை எளிதில் அண்ட விடாது!
பலநாள் குளிர்பதப் பெட்டியுள் உணவு
நலமாய் இராது; மிகுந்திடும் கெடுதி!
'சுத்தம் சோறு போடும்' என்பர்
சுத்தமாய் நகங்களை வைத்திட வேண்டும்
புளிப்பும் உப்பும் இனிப்பும் உரப்பும்
அளவாய் உண்டால் உடல்நலம் பெருகும்!
மிளகுத் தூளும் எலுமிச்சையும்
எளிதாய் உரப்பு புளிப்புக்கு உதவும்!
'நொறுங்கத் தின்றால் நூறு வயது'
விரைந்தே உண்டால் உடல்நலக் கேடு!
வயிற்றை மூன்று பகுதியாய்ப் பிரித்து
வயிற்றுக்கு உணவை வழங்கிட வேண்டும்
ஒருபங்கு உணவும் ஒருவாய் நீரும்
ஒருபுறம் வாய்வுக்கு ஒதுக்கிட வேண்டும்!
வேளா வேளைக்கு உண்ணா விட்டால்
கோளாறாகும் குடல்புண் வந்திடும்
வாரம் ஒருநாள் வயிற்றுக்கு ஓய்வுஎனில்
சீராய் உடல்நலம் செம்மை பெற்றிடும்!
உணவே மருந்தாம் உணர்ந்தே உண்டால்
துணையென எந்த மருந்தும் வேண்டா!
வெற்றிலை பாக்கு ஓரிரண்டெடுத்து
சற்றே மென்றால் செரித்திட உதவும்
வாய்க்குள் புகையிலைக் கவளம் ஒதுக்கினால்
நோய்க்கு இடமாகும் புற்றுநோய் முளைக்கும்
வெற்றிலைக் காவி பற்களைக் கெடுக்கும்
வெற்றிலை எச்சில் சுற்றிலும் கெடுத்திடும்!
காய்ச்சி நன்கு வடிகட்டிய நீர்
குடல்
குடிநீர் அசுத்தமாக இருந்திடில்
கொடிய வாந்தி பேதிநோய் வந்திடும்!
அதிகாலையிலே ஐந்து குவளை
மெதுவாய்த் தண்ணீர் குடித்தால் உடலின்
கழிவுப் பொருள்கள் வெளியேறிடவே
எளிதாய் அமையும் இன்றே செய்வீர்!
குடலும் வயிறும் சுத்தமாய் இருந்தால்
உடலும் உள்ளமும் மகிழ்ச்சியில் துள்ளும்!
காலையும் மாலையும் கடன் கழிக்காவிழல்
சூலமாய்க் குத்திடும் மலச்சிக்கல் வலி
மூலநோயும் குடல் இறக்கமும் நமை
வேலை செய்ய விடாமல் அழுத்தும்!
நீரைச் சுருக்கி நெய்யை உருக்கி
மோரைப் பெருக்கி உண்பவர் தமது
பேரைச் சொன்னால் பறந்திடும் நோய்கள்!
மது விலக்கு
'மது'எனும் அரக்கன் மதியினைக் கெடுப்பான்
மதுவை ஒழித்தால் குடும்பம் மகிழ்வுறும்
மதுவைக் குடித்தே குடல் புண்ணாகி
விதியெனச் செத்தவர் கணக்கில் அடங்கார்
குடியது மிகவும் கொடியது, நல்ல
குடியைக் குடியே கெடுத்திடும் நாட்டில்!
Feet in Hinduism
Why no shoes in a Temple
Feet hold a powerful symbolism with Hindu culture. You take off your shoes when you enter a temple. When sitting you never point your feet towards people, especially seniors, and you never
The basis for feet symbolism goes back to the Vedic conception of the universe as the body of God. Just like a body has high and low parts so this universe has high and low, pure and impure places. Up is high, down is low. Feet touch the ground, which is low, and so when you enter a temple you leave your low part at the door. We take off our impure part, our feet, symbolized by leaving our shoes at the door as we enter sacred space. You might say we leave our materialistic side at the door when we enter
Why do we not touch papers, books and people with the feet?
Along with this question one might also add ask: Why do we not blow out a flame with our breath? The answer to both these questions has to do with one of the most fundamental features of Hinduism, namely personification. Hinduism personifies virtually every aspect of life. The wind is not just air blowing from high pressure to low pressure. It is a God, Vayudeva. The sun is not just a great nuclear reaction in space. It is the sun God, Suryadeva. Similarly, the rain is a God, the moon is a God, all the planets are Gods and every other aspect of reality is subject to personification. Therefore, all things of learning: papers, books, musical instruments, pens, typewriters and even computers can be seen as an aspects of the Goddess of learning, Sarasvati. And we since already know the symbolism of feet in Hinduculture, it is obvious why we do not touch our feet to these items. Similarly, we do not blow a flame with our breath because it would be impolite. The flame is Agni, the fire God, and to blow in his face is impolite! To the Western mind this may seem difficult to understand, but there is great power in personification. Personification gives one the ability to communicate with the God and therefore perhaps control or at least get favors from the Deity. Personification is the basis of puja.


