இந்த வருடம் இப்போதுதான் தொடங்கியது போலிருக்க, மற்றொரு ஜூன் முடிந்து 2009-ன் பாதி பறந்தே போய்விட்டது. Incidentally, உலகத்தையே அசைக்கும் மீடியா தகவல் தொடர்பு சம்பவங்கள் பல நடந்துஇருப்பது ஜூனில்தான். கடந்த 30 ப்ளஸ் ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களை, அவை கொண்டுவரப்பட்ட களம் (Channel) மற்றும் ஏற்படுத்திய தாக்கத்தின் (Impact) பார்வையில் பிரவுசலாம்... www.uiowa.edu/~policult/assets/VietNam/napalm_kim_phuc.jpg -37 வருடங்களுக்கு முன் 1972, ஜூன் 8 - தென் வியட்நாம்! அமெரிக்க ராணுவ உதவியுடன் தென்கொரிய ராணுவ விமானங்கள் நாபாம் குண்டுகளைப் போட்ட பல இடங்களில் ஒன்று, ட்ராங் பேங் என்ற கிராமம். 9 வயதான கிம் புக்கின் வீட்டின் மீதும் குண்டு விழ, உடையெல்லாம் எரிந்து, கதறி அழுதபடி ஓடி வந்த அந்தச் சிறுமியின் புகைப்படம் அமெரிக்கப் பத்திரிகைகளில் சில மாதங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வியட்நாம் போரின் கோரத்தை அமெரிக்கப் பொதுமக்களுக்கு உணர்த்தி, போருக்கு எதிரான மக்கள் கருத்து வளர உதவியது. 20 வருடங்களுக்கு முன், 1989 ஜூன் 4 - சீனாவின் தியான்மென் சதுக்கம். சீன அரசை எதிர்த்துத் திரண்டு இருந்த லட்சக்கணக்கான மாணவர்களைச் சுற்றிவளைத்தது ராணுவம். போராட்டத்தை அரசாங்கத்துக்குத் தெரியாமல் ரகசியமாக வீடியோவில் பதிவு செய்தார்கள் மாணவர்கள். அப்போது ஒரு மாணவர், அணிவகுத்த ராணுவ டாங்க்குகளில் முதல் டாங்கின் முன் வழிமறித்து நிற்கிறார். டாங்க்கைப் பார்த்து ஏதோ திட்டுகிறார். டாங்க் வேகம் குறைந்து நிற்கிறது. டாங்க் மீது ஏறி நின்று, அதனை இயக்கும் ராணுவ வீரரிடம் ஏதோ பேசுகிறார். பின்னர் அவர் இறங்கிக்கொள்ள, டாங்க் அணிவரிசை தொடர்கிறது. அந்த பரபரப்புகள் ஓய்ந்த சில நாட்கள் கழித்து 'டாங்க் மேன்' என்ற பெயரில் வெளியான அந்த வீடியோ பதிவு, சர்வாதிகாரத்தைத் தட்டிக் கேட்பதன் குறியீடாகக் கொண்டாடப்பட்டது. அந்த வீடியோ சீன அரசின் மனித உரிமை மீறல்களை உலகுக்கு வெளிப்படுத்தியது. வீடியோ எடுக்க முடிந்த மீடியாவுக்கு, அதை அழுத்தமாகவும் வேகமாகவும் பொதுமக்களிடம் பரப்ப முடியவில்லை. 'டாங்க் மேன்' யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சீன அரசு அவரைப் பற்றிய தகவல்களைக் கொடுக்க மறுத்ததில் இருந்து, அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்பது மீடியாவின் பலமான யூகம். மேலும் விவரங்களுக்கு, டாங்க் மேனின் விக்கி உரலி http://en.wikipedia.org/wiki/Tank_Man ஜூன் 2009. நேகா அஹாசொல்டான் என்னும் 26 வயதான இரானிய இளம் பெண், அங்கு நடந்து முடிந் திருக்கும் தேர்தலில் அரங்கேறிய முறைகேடுகளை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் நடந்து வந்துகொண்டு இருந்தாள். அவரின் மார்பில் குண்டு துளைக்கிறது. கீழே விழும் அவரின் மூக்கு, வாயிலிருந்து ரத்தம் வர... கேமராவின் கண்கள் முன் இறந்துபோகிறார். சம்பவம் நடந்த சில நிமிடங்களில், அருகில் நின்றிருந்த ஒருவர் விஷயத்தை டிவிட்டிவிட, அதைத் தொடர்ந்து ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஒடும் வீடியோ, யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, 'It is heartbreaking' என அந்த வீடியோ பற்றி பிரஸ் மீட்டில் அறிவிக்க, அதன்பிறகே டி.வி, பத்திரிகை மீடியா இரான் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பு கின்றன. (வீடியோவின் உரலி http://www.youtube.com/watch?v=bbdEf0QRsLM- வயது வந்தவர்களுக்கு மட்டுமான வீடியோ அது. இதை எழுதும்போது தோன்றும் எண்ணம், இதைவிடவும் கோரமான 100 வீடியோக்கள் ஈழத்தில் இருந்து வெளிவந்தபோதும் உலக நாடுகளின் தலைவர்கள் தலையிட்டு கண்டிக்காதது நமது இனத்தின் சோகம்... சாபம்!) 2009-ன் இரண்டாம் பாதியைக் கடக்கும் இந்த நாளில் இணையத்தின் சூப்பர் ஸ்டாராகத் தொடர்வது - சந்தேகம் இன்றி டிவிட்டர் (www.twitter.com). டிவிட்டர் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருப்பது ஒருபுறம் இருக்க, அதை அடித்தளமாக வைத்து வாரம்தோறும் புதிய வலைத்தளங்கள் வெளிவந்தபடி உள்ளன. இது டிவிட்டரின் அசைக்க முடியாத வெற்றிக்கு அத்தாட்சி! உதாரணத்துக்கு, சென்ற சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சில வலைத்தள சேவைகள்... www.tweetboard.com உங்களது நிறுவனத்தின் டிவிட்டர் உரலியை நிறுவன வலைத்தளத்தில் திறம்பட இணைக்கும் தொழில்நுட்பம். வலைத்தளத்தைப் பிரபலப்படுத்த உதவும் உக்தி. www.cotweet.com நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க உதவும் இந்த சேவையை, நகர பிரச்னைகளைத் தீர்க்கப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது சான்பிரான்சிஸ்கோ. (உரலி: http://twitter.com/SF311. நம்மூர் மேயர்/சேர்மன்/பஞ்சாயத்து தலைவர்களே, கவனியுங்கள்.) டிவிட்டரில் உங்களைப் பின்பற்ற (followers) ஆட்களைப் பிடிக்க வேண்டுமா? மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஸ்டைலில் உதவுகிறது - www.twitproquo.com/ மேற்கண்ட அனைத்தையும்விட ரொம்பவே சுவாரஸ்யமான டிவிட்டர் சார்ந்த தொழில்நுட்பம் twitter_device_akiduki. ஜப்பானில் மார்க்கெட்டுக்கு வந்துள்ள 'டிவிட்டர் இதயத் துடிப்பு மானிட்டர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவியில் உங்கள் டிவிட்டர் உரலியை enter செய்துவிட்டால், இதயத் துடிப்பைத் தொடர்ந்து டிவிட்டருக்கு அனுப்பியபடி இருக்கும். OfCourse , நீங்கள் உயிருடன் இருக்கும்வரை!படத்தை எடுத்தவர் அசோஸியேட் பிரஸ்ஸில் பணிபுரிந்த புகைப்படக்காரர் நிக் உட். அது செட்டப் போட்டோவாக இருக்கலாம் என அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் சந்தேகப்பட்டது, பிரபல வாட்டர்கேட் சர்ச்சை டேப்களில் பதிவாகியிருந்தது. பை தி வே, கிம் இப்போது இரண்டு குழந்தைகளின் தாய்; கனடாவில் வசிக்கிறார். கிம் பற்றியும் புகைப்படம் பற்றியும் மேலும் விவரங்கள் அறிய இந்த விக்கி உரலியைச் (Wikipedia URL) சொடுக்குங்கள். http://en.wikipedia.org/wiki/Phan_Th_Kim_Phc
தகவலை நுகர்வது மட்டுமல்ல, அதைச் சேகரிக்கவும், பதிப்பாக்கவும் பொதுமக்களுக்கு இணையம் அளித்திருக்கும் வலிமை amazing! இணையத்தில் பிரபலமாகி வரும் குடிமக்கள் இதழியலை (Citizenship Journalism) இன்னொரு வாரம் அலசலாம்.
பிரபலமான டிவிட்டர் உரலிகளைத் தொகுத்து அளிக்கும் தளம்: www.tweetmeme.com
-logoff
Saturday, July 18, 2009
Revolutionary Internet
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment